‘இந்தியாவுக்கு எதிரான தொடர், தெ.ஆ. அணி அறிவிப்பு’ முன்னாள் கேப்டனுக்கு வாய்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி அடுத்ததாக சொந்தமண்ணில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தென்னாப்பிரிக்கா அணியில் விளையாடாமல் இருந்த முன்னாள் கேப்டன் பாப் டூ பிளிசிஸிற்கு மீண்டும் தென்னாப்பிரிக்கா அணியில் இடம் கிடைத்துள்ளது. குவின்டன் டீ காக் தலைமையில் களமிறங்கும் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் விவரம்:-
டி காக் (C&WK), பவுமா, வான் டெர் துஸ்சன், பாப் டூ பிளிசிஸ், வெரைன், மில்லர், கிளாசன், ஸ்மட்ஸ், பெலுக்வாயோ, நிகிடி, சிபாம்லா, ஹென்றிக்ஸ், நோர்ஜோ, லிண்டே மற்றும் மகாராஜ்.

What do you think?

‘கமலின் இந்த 2 படங்கள் தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்’மாஸ்டர் இயக்குனர்!

மதுரையில் கஞ்சா விற்பனை – பெண் கைது