“சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது” – திமுக வெளிநடப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர், என்.ஆர்.சி சட்டங்களுக்கு எதிராக கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே தனி நபர் தீர்மானம் அளித்திருந்தார்.

இந்நிலையில், இன்றைய சட்டப்பேரவை விவாதத்தின்போது குடியுரிமை திருத்தச் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். ஸ்டாலினுக்கு பதில் அளித்த சபாநாயகர் தனபால், குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார்.

வண்ணாரப்பேட்டை விவகாரம் குறித்து பேசலாம் எனவும் சபாநாயகர் கூறினார். இதனை ஏற்கமறுத்த திமுகவினர் அக்கட்சியின் தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

What do you think?

தூத்துக்குடி அருகே சிஏஏ எதிர்ப்பு போராட்டம் – விண்ணதிரச் செய்த முழக்கங்கள்!

லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஆவின் பால் தட்டுபாடு இல்லை