ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகர்!

துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பல்வேறு அதிரடி அரசியல் நகர்வுகளுக்கு பின் கடந்த 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் பின் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அதில், அந்த சமயத்தில் அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

ஆனாலும் 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்ததால் பெரும்பான்மையைநிரூபித்து எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வெற்றிபெற்றார். இருப்பினும் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைகள் முடிவுற்ற நிலையில், “இந்த விவகாரத்தில் தமிழக சபாநாயகர் விரைவில் உரிய நல்ல முடிவை எடுப்பார் என நம்புவதாகவும், நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு எந்த காலக்கெடுவும் விதிக்க முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.

இந்நிலையில், இன்று துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ஏன் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தீர்கள்? என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

What do you think?

‘கொரோனா வைரஸ் எதிரொலி’ சென்னையிலிருந்து புறப்படும் 10 விமானங்கள் ரத்து!

கொரோனாவால் எகிப்து கப்பலில் சிக்கியுள்ள 17 தமிழர்கள்!