ஓ.பி.எஸ் மீது நடவடிக்கை – சபாநாயகர் தனபால் அதிரடி

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீது விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபோது, தனது அரசு மீது நம்பிக்கைகோரும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டுவந்தார். அப்போது அதிமுகவில் அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள், அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, திமுக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் 11 எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சபாநாயகரே முடிவெடுக்கலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார். இதனை சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், 11 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.

அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய சபாநாயகர், தனது பரிசீலனையில் உள்ள விவகாரத்தை சட்டப்பேரவையில் பேச அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார். எந்த விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்குமாறு தன்னை யாரும் வற்புறுத்த முடியாது என்றும் அவர் கூறினார். மேலும், ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீது விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ப.தனபால் தெரிவித்துள்ளார்.

What do you think?

ஐஐடி பெண்கள் கழிவறையில் வீடியோ எடுத்த பேராசிரியர்; அதிர்ச்சியில் மாணவிகள்

“கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு இல்லாதது அவமானம்” – கமல் உருக்கம்