பாஜக மிரட்டுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்
சிபிஐ மற்றும் அமலாக்க துறை மூலம் பாஜக மிரட்டுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கலால் துறை அமைச்சராக இருந்த மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அமலாக்கத் துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனையில் ஈடுபட்டு, அவர் கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனையொட்டி, அவரது வீட்டு முன் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், செய்தியாளகளிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை மூலம் பாஜக என்னை மிரட்டுவதாக தெரிவித்தார்.
பாஜகவில் இல்லாதவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்த அவர், பாஜக உடைய குறிக்கோள் தன்னை விசாரணை செய்ய வேண்டும் என்பதல்ல என்றும், நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தான் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.