திருவாரூர் விளமல் கோவிலில் சிறப்பு அன்னாபிஷேகம்..!!
திருவாருர் அருகேயுள்ள விளமலில் மிகவும் பழமை வாய்ந்த பதஞ்சலி மனோகரர் கோவில் அமைந்துள்ளது. மாதந்தோறும் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில், சிறப்பு வழிபாடு நடைபெற்று வரும்.
நேற்று வைகாசி மாதம் முதல் அமாவாசை என்பதால், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தை தொடர்ந்து சுவாமிக்கு அன்ன அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றுள்ளது. பின் சிறப்பு பூ அலங்காரத்தில் பதஞ்சலி மனோகர் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
இவரை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த பூஜைகள் அனைத்தும் சந்திர சேகர சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றுள்ளது.., என்பது குறிப்பிட தக்கது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி