பலாப்பழம் சுளையில் அஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்..!!
செஞ்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அமாவாசை என்பதால்.., பலாப்பழம் சுளை வைத்து சிறப்பு அலங்காரம் செய்துள்ளனர். இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று, பக்தர்களே அஞ்சநேயருக்கு சிறப்பு பூஜையும் அலங்காரமும் செய்வது வழக்கம்.
நேற்று வைகாசி மாதத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால், காலை சிறப்பு அபிஷேகம் செய்துள்ளனர். அபிஷேகத்தை தொடர்ந்து பல சுளைகள் வைத்து அலங்கரித்து, தீப ஆராதனை செய்துள்ளனர்.
மேலும் நேற்று இக்கோவிலுக்கு வந்த அணைத்து பக்தர்களுக்கும்.., பிரசாதமும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி