மிளகாயை சமையலில் பயன்படுத்தும்போது கடைபிடிக்க வேண்டியவை..!
சமையலுக்கு வர மிளகாய், பச்சை மிளகாய், குண்டு மிளகாய், கேரளம் நெய் மிளகாய், வத்தல் மிளகாய் ஆகிய பல்வேறு வகைகளை நாம் பயன்படுத்துகிறோம். அப்படி மிளகாயை பயன்படுத்தும்போதும் பாதுகாக்கவும் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
பச்சை மிளகாய் வாங்கியதும் அதன் காம்புகளை நீக்கிவிட்டு அதில் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து குலுக்கி ஒரு டப்பாவில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க நீண்ட நாட்களுக்கு பழுக்காமல் இருக்கும்.
பச்சை மிளகாயை சாப்பிடுவதால் அல்சர் வராமல் தடுக்க சிறிது சூடான நீரில் மிளகாயை போட்டு வைத்து பின் சமைக்கலாம்.
பச்சை மிளகாயை அதிகமாக பயன்படுத்தும் நேரம் வரும்போது அதனை கத்தியால் நறுக்குவதை தவிர்த்து கத்தரிக்கோலால் நறுக்கும்போது கை எரிச்சலை தவிர்க்கலாம். ஒருவேளை கத்தியால் நறுக்கி கை எரிச்சல் ஏற்பட்டாலும் சிறிது நல்லெண்ணெய் கைகளில் தடவலாம்.
மிளகாய் ஆகிய மசாலா வகைகளை வறுத்து அரைத்து பொடி செய்து வைத்தால் சமையலுக்கு ஈசியாக பயன்படுத்தலாம்.
வரமிளகாயை சமைக்கும்போது அதன் காம்புகள் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு சமைப்போம், அதனை அப்படியே சேமித்து வைத்தால் மிளகாய்தூள் அரைக்கும்போது சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
உங்கள் வீட்டில் செடி வளர்க்க இடம் இருந்தால் அந்த மிளகாய் விதைகளை சிறிது தெளித்து விட அது வளர்ந்து நமக்கு பச்சை மிளகாயை தரும்.
மிளகாயை வறுக்கும்போது நெடி வராமல் தடுக்க அதில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து வறுக்கலாம்.
மிளகாய் அரைக்கும்போது சிறிது உப்பு சேர்த்து அரைத்து பின் கண்ணாடி பாட்டலில் சேமித்தால் அதில் பூச்சுகள் பிடிக்காமல் நீண்ட நாட்களுக்கு கெடாது.
மிளகாய் அரைத்து சேமிக்கும் பாட்டலில் சிறிது பெருங்காயம் போட்டுவைத்தால் அது கெடாமல் இருக்கும்.
மிளகாய் அரைத்த பிறகு வெயிலில் சிறிது காயவைத்து ஜிப் லாக் கவரில் சேமித்தாலும் அதன் காரம் குறையாமல் அப்படியே இருக்கும்.
பயன்படுத்திய சூடான கல்லில் வரமிளகாயை பரப்பி வைத்து பின் சில்லி ஃபிளேக்ஸ் செய்தால் சில்லி ஃபிளேக்ஸ் சீராக கிடைக்கும். மிளகாய் கருகாமலும் இருக்கும்.