காரசாரமான சிக்கன் வறுவல் பார்க்கலாமா..!
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கி
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
பட்டை – 2
கிராம்பு – 3
ஏலக்காய் – 3
மராட்டி மொக்கு -1
அன்னாசி பூ -1
கல்பாசி – சிறிதளவு
வரமிளகாய் – 4
தனியா – 2 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
முந்திரி- 10
பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
கசகசா – 1 ஸ்பூன்
துருவிய தேங்காய் – 5 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
மேலே வறுக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை எல்லாம் வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே கடாயில் துருவிய தேங்காயும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி வின் தக்காளியை சேர்த்து வதக்கவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
பின் சிக்கனை அதில் போட்டு வதக்கவும் சிறிது வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள பொடி சேர்த்து கிளறிவிட்டு தண்ணீர் ஊற்றி மூடி வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் காரசாரமான சுவை மிகுந்த சிக்கன் வறுவல் தயார்.