டுடே ஸ்நாக் ரோட்டு கடை முட்டை காளான்…!
முட்டைகோஸ்-1கப்
காளான் -2 கப்
வெங்காயம்-1
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
கரம் மசாலா-1/4 தேக்கரண்டி.
மைதா-1/2 கப்.
சோளமாவு-1 தேக்கரண்டி.
கடலை மாவு-1 தேக்கரண்டி.
உப்பு-1 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
கரம் மசாலா-1/4 தேக்கரண்டி.
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1/4 தேக்கரண்டி.
உப்பு-1 தேக்கரண்டி.
சில்லி சாஸ்-1 தேக்கரண்டி.
தக்காளி சாஸ்-1 தேக்கரண்டி.
சோளமாவு-1 தேக்கரண்டி.
முட்டை -1
கொத்தமல்லி- சிறிதளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், காளான் , இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மைதா மாவு, கடலை மாவு, சோள மாவு மற்றும் உப்பு ஆகியவற்றை கலந்து நன்றாக பிசைந்து பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நீர் ஊற்றி, அதில் மிளகாய்த்தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் அதில் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், நீரில் அரைத்த சோள மாவு ஆகியவற்றை கலந்து கொதிக்க வைத்து இறக்கவும். இப்போது குழம்பு தயார்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் முட்டை உடைத்து ஊற்றி பொரித்து பின் அதில் கரண்டி குழம்பு ஊற்றி அதில் காளானை போட்டு வதக்கி எடுத்து அத்துடன் வெங்காயம், கொத்தமல்லி தூவி சாப்பிடலாம். சுவையான டேஸ்டில் ரோட்டு கடை முட்டை காளான் தயார்.
