இலங்கை இனப்படுகொலை..!! தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த வைகோ..!!
தனி ஈழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைத் தமிழர் இனப்படுகொலை அல்லது ஈழத்தமிழர் இனப்படுகொலை என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் துப்பாக்கி சூடு நடத்தியும், சித்திரவாதை செய்தும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்யும் இனவழிப்பைக் குறிப்பதை இனப்படுகொலை என சொல்லப்படுகிறது.
இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு15 ஆவது நினைவேந்தல் நிகழ்வு சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் நடைபெற்றது. மே 17 இயக்கம் சார்பில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் 300 க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர்.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் உருவப்படம் பெசன்ட் நகர் கடற்கரை மணலில் மலர்கள் சூழ அலங்கரிக்க பட்டிருந்தது. இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கவும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஓவியர் ட்ராஸ்கி மருது, இயக்குநர் கவிதா பாரதி உள்ளிட்டோர் பாலச்சந்திரன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வைகோ நினைவேந்தல் தீப்பந்தத்தை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர் சந்தித்து பேசிய வைகோ,
“ஈழப்போரின் போது கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவுபடுத்தி தான் இங்கு தீபங்கள் ஏற்றப்பட்டன. சுதந்திர தமிழ் ஈழம் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வாகும். தமிழீழத்தை சுதந்திர நாடாக அறிவிக்க வேண்டும்.
மேலும் குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக உள்ளன. தனி ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஹிட்லர் கொலை தான் செய்தார். ஆனால் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டார்கள்.
இனப்படு கொலையை நடத்தியவர் இன்றும் சுதந்திரமாக இருக்கிறார். இந்திய அரசின் உதவியை பெற்றுக் கொண்டு சிங்களவர் தமிழர்களை அழித்தார். இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்த தமிழ்நாடு அரசுக்கும் காவல் துறைக்கும் எனது நன்றி” என்றார்.
இலங்கை அரசு இனப்படுகொலை குற்றம் புரிந்ததற்கான பல்வேறு ஆவணங்கள் இன்றளவும் வந்து கொண்டிருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்பு கூட இலங்கையில் மனித புதை குழிகள் மூலம் கொத்து கொத்தாக தமிழர்களின் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டனர்.
ஐநாவின் நிபுணர் குழு ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை ஆவணப்படுத்தி உள்ளது. இனப்படு கொலைக்கான சர்வதேச சுதந்திர விசாரணையை கொண்டு வர வேண்டும், மேலும் சுதந்திர தமிழத்திற்கான பொது வாக்ககெடுப்பு நடத்தப்பட வேண்டும்” என்று திருமுருகன் காந்தி வலியுறுத்தினார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..