இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு! : இலங்கை அமைச்சர் வலியுறுத்தல்

இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண பாக் நீரிணை-மன்னார் வளைகுடா கூட்டு கடல்சார் மீன்வள மேலாண்மை ஆணையம் அமைக்கவேண்டும் என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வந்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய டக்ளஸ் தேவானந்தா.இலங்கை மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து 19 பக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை அவரிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடல்சார் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிப்பதை மிகவும் உணர்வுப்பூர்வமாக பார்க்கவேண்டும்” எனக் கூறினார். தென்னிந்தியாவையும், இலங்கையின் வடக்கு மாகாண பகுதியையும் பிரிக்கும் பாக் நீரிணை-மன்னார் வளைகுடா பகுதியில் பல்வேறு தனித்துவமிக்க கடல் வளங்கள் உள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் ஊடுருவி மீன்பிடிப்பது இலங்கை வடக்கு மாகாண பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்த அவர், ஈழப்போர் நடந்தபோது இலங்கையின் வடக்கு மாகாண பகுதியில் உள்ள தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை எனக் கூறினார். மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கூட்டு கடல்சார் மீன்வள மேலாண்மை ஆணையம் அமைக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆணையத்தில் 2 நாடுகளை சேர்ந்த மீன்வளத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள், இலங்கை வடக்கு மாகாணம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட 2 நாடுகளில் இருந்தும் தலா 7 உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா விருப்பம் தெரிவித்துள்ளார்.

What do you think?

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக அரசுக்கு அற்புதம்மாள் வலியுறுத்தல்!

“அனைத்து மத வழிபாடு சுதந்திரம் தொடர்பாக விசாரிக்கப்படும்” – உச்சநீதிமன்றம் அதிரடி