இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர் படுகாயம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாகிச்சூடு குறித்து கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஜேசு அலங்காரம், கிங்ஸ்டன் உள்ளிட்ட 6 பேர் விசை படகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் இந்திய – இலங்கை எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில், ஜேசு அலங்காரத்தின் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து கியூ பிரிவு காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

தடையை மீறி போராட்டம்; 15,000 இஸ்லாமியர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

காவலர் பணி நியமனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை