தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ள காரணத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31 வரை மூடப்பட்டுள்ள நிலையில், 10-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 27ஆம் தேதியிலிருந்து ஆரம்பிக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பெற்றோர்கள், ஆசிரியர்கள் விடுத்துள்ள கோரிக்கையை அடுத்து முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகே 10-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், 11, 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளில் நடைபெறும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

What do you think?

‘கொரோனாவால் டிரெண்டாகும் படையப்பா திரைப்படம்’ காரணம் இதுவா?

‘ஓவியம், உடல் உறுப்பு தானம்’ நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் கடைசி ஆசைகள்!