டெல்லிக்கு புறப்பட்ட ஸ்டாலின்..!! ம.செ.களுக்கு போட்ட உத்தரவு..?
இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற இருந்த நிலையில் இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று உள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
அடுத்த பிரதமர் யார் என்பது..? அரசியல் கட்சியினர்களிடம் மட்டுமின்றி பொதுமக்களிடமும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஜூன் 1ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள இந்திய கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அதை அடுத்து சென்னை அண்ணா சாலையில் உள்ள திமுக தலைமையகமான அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் மூத்த நிர்வாகிகள் திடீர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், மூத்த அமைச்சர்களான கே.என் நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த ஆலோசனையில் டெல்லி இந்தியா கூட்டணியில் பங்கேற்பது குறித்தும் வாக்கு எண்ணிக்கை குறித்தும் ஆலோசிக்க போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆலோசனைக்குப் பிறகு மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஜூன் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின் படி, ஜூன் 4ம் தேதி அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து கலந்து ஆலோசித்திட, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தலைமையில் “மாவட்டக் கழகச் செயலாளர்கள் – கழக வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்” ஜூன் 1ம் தேதி காலை 11.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., அவர்கள் வாக்கு எண்ணிக்கையின் போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்க இருப்பதாகவும்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழக வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். என கூறியுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..