பாஜாகாவின் பொய்களை லிஸ்ட் போட்ட ஸ்டாலின்..!!
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.., அதற்காக சில அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.., அதேபோல் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளது.
இன்று காலை பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்து.., இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது வளையத்தளம் பக்கத்தில் பாஜகவை விமர்சனம் செய்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்..
1. ஒன்றிய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி. ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது. இதன்கீழ் உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பாஜக அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே..!
2. ஒன்றிய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு. இதில் பாஜக காட்டியுள்ள பொய்க்கணக்குகள் என்னென்ன தெரியுமா.. ?
3. இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி, ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி, சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி என்று, ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு.
4. இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு, விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பாஜக அமைச்சர்களாவது விளக்க முன்வருவார்களா..?
இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல தற்போது வெளியிடப்பட்டுள்ள அநியாயப் பொய்கள் நிறைய உள்ளது.., தம் உழைப்பாலும் தொழில் திறத்தாலும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள தமிழ்நாட்டின் சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி,
திருப்பிச் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல கூறிக்கொள்கிறது ஒன்றிய பாஜக அரசு.
எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்..? எங்கள் காதுகள் பாவமில்லையா.. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னதாக பாஜக தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான 27 பேர் கொண்ட குழு செயல்பட்டது.., “மோடியின் உத்தரவாதம்” என்ற தலைப்பில் இந்த தேர்தல் அறிக்கைகளானது வெளியிடப்பட்டது.
இதில், 14 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதில் ஒன்றை கூட பாஜக நிறைவேற்ற போவதில்லை.., வழக்கம் போல நம் திமுக அரசு செய்த சாதனைகளை எல்லாம் அவர்கள் செய்தது போல அடுத்த தேர்தலில் சொல்லுவார்கள் இல்லையா நாங்கள் திட்டம் கொண்டு வர இருந்தோம் ஆனால் அதை திமுக தடுத்துவிட்டது என பொய்யை பரப்புவார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே பிநட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..