கலாஷேத்ரா அகாடமியில் 30 மாணவிகளிடம் மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாணவிகளுக்கு வளாகத்தில் இனி இடையூறு ஏற்பட்டால் புகார் தெரிவிக்க அதிகாரிகளின் தொலைபேசி எண்களை மாநில மனித உரிமைகள் ஆணையம் வழங்கியது
சென்னை திருவான்மையூர் கலாஷேத்ரா அகாடமியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக புகார் தெரிவித்து மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சினை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் நேரடியாக விசாரணை நடத்தினர்
மேலும் இது தொடர்பாக முன்னாள் மாணவி அளித்த புகார் அடிப்படையில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது மூன்று பிரிவுகளில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணையம் நேற்று
மனித உரிமைகள் ஆணைய காவல் துறை எஸ் பி மகேஸ்வரன் தலைமையில் குழு கலாஷேத்ரா கல்லூரியின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குனர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று கல்லூரி வளாகத்தில் உள்ள ருக்மணி தேவி அரங்கில் 30 மாணவிகளிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர். இதில் சுமார் 30 நிமிடம் நடைபெற்ற இந்த விசாரணை முடிவில், இனி அகாடமியின் வளாகத்திற்குள் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் புகார் தெரிவிக்கும் வகையில் மாணவிகளுக்கு தொலைபேசி எண்ணை ஆணைய அதிகாரிகள் வழங்கி இருக்கின்றனர். இனி மாணவிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் மாணவிகளிடம் நடத்திய விசாரணை முக்கியமாக பார்க்கப்படுகிறது