திமிறிய கோவை..!! வழிய போய் சிக்கிய அண்ணாமலை.!! கும்பிடபோன இடத்தில்..?
வருகின்ற லோக்சபா தேர்தலில் கோவையில் இந்த முறை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.., அண்ணாமலை போட்டியிடுவதாலேயே கோவை தொகுதி தேசிய அளவில் கவனத்தை பெற்று வருகிறது.
அண்ணாமலையின் சொந்த மாவட்டமான கோவையில் வெற்றி பெறா விட்டால் அவமானம் என எண்ணிய அண்ணாமலை இந்த முறை எப்படியாவது வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கில் அவர தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.
அந்தவகையில் நேற்று நள்ளிரவு அண்ணாமலை மற்றும் பாஜகவினர் கோவையில் பல இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.. பின்னர் அண்ணாமலை சூலூரை நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது, திடீரென அங்கு வந்த போலீசார் அண்ணாமலையின் காரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அப்போது காரில் இருந்து கீழே இறங்கி வந்த அண்ணாமலை, போலீசாரிடம் ஏன்..? என் காரை நிறுத்துனீங்க என கேட்டுள்ளார்.., அதற்கு போலீசார், இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை இதனால் காரை தடுத்து நிறுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் கடுப்பான அண்ணாமலை அதெ எல்லாம் நீங்க எப்படி சொல்லலாம்.., “நான் 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யலையே.. பிரச்சாரத்தை முடித்துவிட்டு காரில் வீட்டுக்குதானே போயிட்டு இருக்கேன்..
நான் பிரச்சாரம் பண்ணிட்டு போக என கிட்ட என்ன மைக்கா இருக்கு..,
நாங்க கேமரா மைக் எல்லாம் ஆப் பண்ணி ரொம்ப நேரம் ஆச்சு.., தாமரை என்ற வார்த்தையை கூட நாங்கள் பயன்படுத்தவில்லை.., இவ்வளவு ஏன் நான் ஒட்டு போடுங்கனு கூட மக்களை கிட்ட கேட்கல, நான் பாட்டுக்கு போய்ட்டு இருக்கேன்..,
நான் 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக ஏதாவது ஒரு வீடியோ, போட்டோ இருக்கா..? இருந்தால் காட்டுங்க என கேட்டுள்ளார்..
அதற்கு காவல்துறையினரும் அவர் வழியெங்கும் கும்பிட்டு கொண்டு வந்த புகைப்படம் மற்றும் வீடியோவை காண்பித்துள்ளனர். அதனை பார்த்த அண்ணாமலை, நான் கும்பிட்டது எல்லாம் பிரச்சாரம் ஆகாது என தெரிவித்துள்ளார்.
நான் இரவு 10 மணிக்கு முன்பே பிரச்சாரத்தை முடித்துவிட்டேன்.., ஒவ்வொரு வேட்பாளர்களும் பிரச்சாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருக்கிறார்கள்..,
பிரச்சாரத்தை முடித்து விட்டு இரவு 10.30 மணிக்கு மேல் ஒரு இடத்தில் காரை நிறுத்தி டீ குடித்துக் கொண்டிருந்தோம் அப்போது எங்களை பார்த்து கும்பிட்டு பேசியவர்களிடம் பதிலுக்கு கும்பிட்டு எனக்கு வாக்களியுங்கள் என கேட்டேன் இது எப்படி பிரச்சாரம் ஆகும்
இது எப்படி விதிமீறலாகும்.. ? நீங்கள் என்னிடம் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறீர்கள்” என்று போலீசாரிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதனை தொடர்ந்து அண்ணாமலை தன்னுடைய ஆதரவாளர்களுடன், சூலூரில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டார்.. அதன் பிறகு உயர் அதிகாரிகள் அண்ணாமலையுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்த பின்னரே, சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு சென்றார்.
வழக்கு பதிவு : இந்த சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரி சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.. புகாரின் அடிப்படையில் 2 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து நம் செய்தியாளர் இதுகுறித்து கேட்ட போது, நான் “கோவையிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரச்சாரம் செய்தேன்.. சில கட்சிகளின் பணத்தை டிரான்ஸ்போர்ட் பண்ணுவதில்தான் காவல்துறையினர் கவனம் இருக்க வேண்டுமே தவிர பாஜக என்ன செய்கிறது 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்கிறதா அல்லது காரில் பணத்தை எடுத்து கொண்டு சுற்றுகிறதா என்ற வேலையெல்லாம் பார்க்க வேண்டாம்.
நான் விதிமீறலில் ஈடுப்பட்டேன் என்றால் அதற்கான ஆதாரத்தை கேட்டேன்., ஆனால் போலி ஆதாரத்தை காண்பிக்கிறார்கள்.., நான் மக்களை பார்த்து கும்பிவிடவில்லை என்னை பார்த்து அவர்கள் கும்பிட்டார்கள் பதிலுக்கு நான் கும்பிட்டேன்.., ஒரு வேல நான் அவங்களுக்கு சலாம் போடாமல் போனா என்னை அடுத்த முறை மதிப்பார்களா..?
கெட்ட பெயர் எனக்கு வருமா..? இல்ல இந்த போலீசுக்கு வருமா..? எங்க வண்டியை நடுரோட்டில் நிறுத்தி, வண்டியை விடமாட்டேன் சொன்னா என் இமேஜ் என்ன ஆகும்.., நான் விதிமீறல் செய்ததாக காவல்துறை நியாயப்படுத்தறாங்க.. ரூல் புக் எங்கேன்னு காட்டுங்க.. என பேசி கொண்டிருக்க..
இவரின் சில சொற்கள் அங்கிருக்கும் மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.. இதற்கு முன்னரே பாஜகவிற்கு கோவை மற்றும் திருப்பூர் பகுதியில் ஆதரவு கிடைக்காத நிலையில் திருப்பூரின் பல பகுதியில் “கோ பேக் மோடி” போன்ற செயல்கள் பாஜகவிற்கு வீழ்ச்சியை கொடுத்தது..
இந்நிலையில் அண்ணாமலை மக்கள் என்னவோ அவருக்காக மட்டுமே காத்திருக்கும் படி பேசியது.., இன்னும் முகம் சுழிக்க வைத்துள்ளது.., இதனால் மக்களின் ஆதரவு திமுக பக்கம் திரும்பியது குறிப்பிட தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..