மீளமுடியாத சரிவில் பங்குச்சந்தை!

கொரோனா வைரஸ் பாதிப்பால் 2-வது வாரமாக இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது.

வாரத்தின் முதல் நாளான நேற்று வர்த்தகம் தொடங்கிய உடனேயே பங்குச்சந்தையின் புள்ளிகள் மளமளவென குறைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 885 புள்ளிகள் குறைந்து 32 ஆயிரத்து 240 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 513 புள்ளிகள் குறைந்து 9,500 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

இந்நிலையில், இன்று வர்த்தக தொடக்கத்தின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 530.55 புள்ளிகள் சரிந்து 30,859.52 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 9 ஆயிரத்து 079 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

What do you think?

தங்கம் விலை வீழ்ச்சி – மக்கள் மகிழ்ச்சி

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 3-ஆக அதிகரிப்பு