மர்ம முறையில் வீசப்படும் கற்கள்.. அச்சமடைந்த பொதுமக்கள் கோவிலில் தஞ்சம்…!
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த ஒட்டப்பாளையம் கிராமத்தில் கடந்த 12 நாட்களாக இரவு நேரங்களில் மர்ம முறையில் வீட்டின் மேல் தொடர்ந்து கற்கள் விழுந்து வருகின்றன.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் குட்டி சாத்தான் எதவாது செய்கின்ற வேலையா அல்லது மனிதர்கள் செய்கிறார்களா? என்ற பயத்தில் அருகில் உள்ள கருப்பராயன் கோவிலில் தஞ்சம் அடைந்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டதை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
இந்தநிலையில், அப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, மின் விளக்குகள் பொருத்தப்பட்டு 60 அடி கிரேன் வாகனம் உதவியுடன் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ட்ரோன் கேமரா மூலம் தொடர்ந்து அப்பகுதி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே கல் வீச்சால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்தும், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி நேரடியாக ஆய்வு நடத்தினார்.
பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், கல் வீசியவர் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தூக்கமின்றி தவிக்கும் தங்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பவானி கார்த்திக்