நில் மற்றும் கவனி..!! போக்குவரத்து போலீசுடன் கிறிஸ்துமஸ் தாத்தா..!!
வி.எஸ் மருத்துவமனை மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
சென்னை அண்ணா சாலையில் வி.எஸ் மருத்துவமனை சார்பில் போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து, “நில் மற்றும் கவனி” (“STOP and WATCH”) போக்குவரத்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
சென்னை முழுவதும் 50 முக்கிய சிக்னல்களில் நடைபெற்ற இந்த முன்முயற்சி சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதையும், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
இரண்டு நாள் பிரசாரத்தின் போது, 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் (சாண்டா கிளாஸ்கள்) வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுடன் தொடர்பு கொண்டு, சிறந்த சாலை பாதுகாப்பு நடத்தையைக் பின்பற்றியவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினர்.
இந்த விடுமுறை காலத்தில், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு கற்பிப்பதில் இந்தத் திருவிழா தூதுவர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..