வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப்பெற்றது பின்னர் நேற்று இரவு அது புயலை வழுவாடடைந்து, தமிழகம் மற்றும் புதுவையை நோக்கி மாண்டஸ் புயல் நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பில், வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வாடா மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நேற்று இரவு அது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலின் காரணமாக தமிழகம் புதுவை மற்றும் ஆந்திர பகுதிகளில் வரும் 10ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று அறிவித்தது இதனால் துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றப்பட்டு மீனவர்களுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தபட்டது.
இந்நிலையில் நேற்று உருவான இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என்றும் இதனால் இன்று தமிழகம் முழுவதும் 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயலின் வருகையால் சென்னையில் தரைக்காற்று மற்றும் கடல் அலையின் சீற்றம் அதிகரித்துள்ளது இன்று நள்ளிரவு முதல் இந்த சீற்றம் மேலும் அதிகரிக்க கூடும் என்று எச்சரித்துள்ளது.