மாநாடு 100வது நாள் கொண்டாட்டத்தில் தியேட்டரில் நடிகர் சிம்பு ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் -24 ஆம் தேதி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான படம் மாநாடு. இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரிய தர்சன் நடித்திருந்தார்.
மேலும், இப்படத்தில் படத்தில் பிரேம்ஜி அமரன், கருணாகரன், அஞ்சேனா கிருத்தி, அரவிந்த் ஆகாஷ் மற்றும் மனோஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்புவிற்கு ஒரு கம் பேக் படமாக மாநாடு அமைந்தது. இன்றைய காலக்கட்டத்தில் ஒரு சினிமா 100 நாட்கள் தியேட்டரில் ஓடுவது என்பது மிகப்பெரிய விஷயமாக மாறிவிட்ட சூழலில் மாநாடு அந்த சாதனையை படைத்திருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் மாநாடு படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் களைகட்டியது. அதில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்துள்ளார். அப்போது அவர் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.