2018-ம் ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் கைது!

 .

 கடந்த நவம்பர் மாதம் மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு மர்ம நபர் ஒருவர் இமெயில் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவனுக்கு, இந்தி தெரியாது என்றும் பீகாரில் இந்தியில் நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவன் தனுஷ் மீது சந்தேகம் இருப்பதாக கல்லூரி நிர்வாகம் பூக்கடை போலீசாரிடம் புகார் அளித்தது. கல்லூரி நிர்வாகத்தின் புகாரை அடுத்து அந்த மாணவன் கல்லூரிக்கு வருவதுமில்லை என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இந்நிலையில் பூக்கடை தனிப்படை போலீசார் ஓசூர் சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் மாணவனும், அவரது தந்தையும் கடந்த சில நாட்களாகவே தலைமறைவாகி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து நீட் ஆள்மாறாட்டம் குறித்த வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரியில் தலைமறைவான இரண்டாம் ஆண்டு மாணவனுக்கும் நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் தொடர்பு இருக்குமோ என்ற அடிப்படையில் சிபிசிஐடி போலிசாருக்கு தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பூக்கடை போலிசார் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருப்பது உறுதியானதை அடுத்து  சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த இரண்டாம் ஆண்டு மாணவன் தனுஷ் மற்றும் அவரது தந்தையைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

டெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு !

டெல்லி வன்முறை : காவல்துறையின் மெத்தனப்போககே காரணம் – உச்சநீதமன்றம்!