நுழைவுத் தேர்விற்கு பயிற்சிப் பெற்ற 25 மாணவர்கள் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரத்தில் உள்ள பயிற்சி மையத்தில் ஐ.ஐ.டி – ஜே.இ.இ நுழைவுத்தேர்வு, நீட் நுழைவுத்தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் பிரசித்திப் பெற்ற பயற்சி மையத்தில் ஒன்று. இதில் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து சுமார் 3 லட்சம் மாணவர்கள் வந்து தனியார் கோச்சிங் மையங்களில் தங்கிப் படித்து வருகின்றனர்.