மனவேதனையில் இருந்த மாணவர்கள்..!! எட்டி உதைத்த ஆசிரியர்..!!
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூரில் “நிர்மலா அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி” பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.. இப்பள்ளியில் சுமார் 1,200 மாணவர்கள் படித்து வரும் நிலையில்., இந்த பள்ளியில் கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமன்றி தர்மபுரி மாவட்டம், நெருப்பூர், நாகமரை, ஒட்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் அரசு விடுதிகளில் தங்கி இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதில், கால் இறுதிச்சுற்றில் நிர்மலா பள்ளியும், ஜி.வி தனியார் பள்ளியும் விளையாடின. அதில், முதல் சுற்றில் நிர்மலா பள்ளி மாணவர்கள் சரியான பயிற்சி இல்லாதததால் அவர்களால் அடுத்த கட்டத்திற்கு தேர்வாக முடியவில்லை..
இதனால் ஆத்திரமடைந்து, அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, விளையாட்டு இடைவெளியின் போது மாணவர்களை தரையில் அமரவைத்து, “நீ என்ன பொம்பளையா..? ஏன்டா உங்களுக்கு எல்லாம் கால் வராதா..? உங்களுக்கு எல்லாம் சரியா விளையாட என்னக்கேடு” என்று கடும் வார்த்தைகளால், மாணவர்களை வன்மையாக திட்டியிருக்கிறார்.
திட்டியது மட்டுமின்றி மாணவர்களை ஷூ காலால் ஆவேசமாக எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்து துன்புறுத்தியுள்ளார். இதனை பள்ளி ஆசிரியர்களும், ஏராளமான மாணவர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் கூனிக்குறுகி அமர்ந்து, கண்ணீர் விட்டு அழுகின்ற காட்சி காண்போரின் நெஞ்சை பதபதக்க வைத்துள்ளது..
இதனை கண்ட சமூக ஆர்வலர்கள் அந்த உடற்பயிற்சி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டனங்கள் எழுப்பி வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..