சம்மர்க்கு ஏற்ற ஸ்டைலிஷ் உடைகள்..!!
அடிக்கும் வெயிலுக்கு எந்த உடை அணிந்தால் கசகசவென இல்லாமல் இருக்கும். என பார்த்து பார்த்து உடைகளை அணிகின்றோம். அதிலும் ஸ்டைலிஷ் வேண்டும் என்பது இந்த கால இளைஞ்சிகளின் ஆசை. அப்படி ஸ்டைலிஷ் ஆகவும், சம்மருக்கு ஏற்றவாறும் இருக்கும் உடைகளை பற்றி பார்க்கலாம்.
கஃப்தான் உடை : காட்டன் போன்ற எளிமையான துணிகளில் தயாரிக்கப்படும் உடை தான், கஃப்தான் இவை ஸ்டைலிஷ் ஆகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.
இவை நீளமாகவும், குட்டையாகவும் இருப்பதால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.
கிராப் சட்டை : கிராப் சட்டை பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பது மட்டுமின்றி.., காற்று புகுவதற்கு ஏற்றவாறு இருக்கும்.
இதனால் வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் எரிச்சலில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
டேங்க் டாப்ஸ் : பார்ப்பதற்கு மாடர்ன் தோற்றத்தை அளிக்கும் இந்த டேங்க் டாப்ஸ்.., ஜீன்ஸ், ஸ்கட், எதனுடன் வேண்டுமானாலும் அணியலாம்.
அதனுடன் அதற்கு மேட்சிங் ஆக மெலிதான கம்மல் அல்லது செயின் அணியலாம்.
டூனிக்ஸ் டாப்ஸ் : வெளியே காய்கறி வாங்க சென்றாலும் சரி.., காற்று வாங்க பீச் சென்றாலும் சரி எங்கு வேண்டுமானாலும் டூனிக்ஸ் டாப்ஸ் அணிந்து கொண்டு போகலாம். அதற்கு மேட்சிங் ஆக ஜீன்ஸ் அணிந்தால் இன்னும் அழகாக காட்டும்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி