பிரபல தொழிலதிபர் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, கடந்த 2024 ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி காலமானார். அவர் எழுதிய உயில் சமீபத்தில் வெளியாகி பலரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 3 கோடி ரூபாய்க்கும் மேல் தன் வீட்டில் நீண்ட நாள்களாகப் பணி செய்தவர்கள் மற்றும் தனது அன்பான செல்லப்பிராணிக்கென உயில் எழுதி வைத்திருக்கிறார்.
குறிப்பாக `தன்னிடம் வீட்டுப் பணியாளராக இருந்த சுப்பையா கோனாருக்கு ரூ.66 லட்சம் கொடுக்கவேண்டும், அதில் அவரின் 36 லட்சம் கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும்’ என்றும் எழுதி வைத்திருந்தார் தமிழகத்தை சேர்ந்த சுப்பையா கோனார், ரத்தன் டாடாவின் வீட்டில் நிழல் போல இருந்து அவரை கவனித்துக் கொண்டவர்.
ரத்தன் டாடா உள்நாடு, வெளிநாடு என்று பயணித்தால் அவருடன் சுப்பையா கோனாரும் செல்வார். ரத்தன் டாடாவே சுப்பையா கோனாருக்கு ஏற்ற வகையில் உடைகளையும் தைக்க ஆர்டர் கொடுப்பார்.ரத்தன் டாடாவின் இறுதிக்காலத்தில் கூடவே இருந்து கவனித்துக்கொண்ட சுப்பையாவை, டாடா வாழ்ந்து மறைந்த மும்பை கொலாபாவில் உள்ள பக்தவார் இல்லத்தில்தான் இப்போது வசித்து வருகிறார்.
சுப்பையா கோனாருக்கு மட்டுமல்ல தனது சமையல்காரரான ராஜன் ஷாவுக்கு ஒரு கோடியும் தனது தனிச் செயலாளரான டெல்னாஸ் கில்டருக்கு 10 லட்சமும் வழங்க ரத்தன் டாடா உயில் எழுதியுள்ளார். ரத்தன் டாடா தன் வளர்த்து வந்த டிடோ என்ற ஜெர்மன் ஷெப்பர் நாய்க்கு 12 லட்சம் உயில் எழுதி வைத்துள்ளார். தன் கடைசி காலம் வரை டிடோ தனது சமையல்காரரான ராஜு ஷா பராமரிக்க வேண்டுமென்றும் உயிலில் ரத்தன் டாடா குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தமிழரான சுப்பையா கோனார் , ரத்தன் டாடா தனது பெயரில் உயில் எழுதி வைத்திருப்பதை பெருமையாக கருதுகிறார். இது குறித்து, தமிழ் பத்திகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மகனை போல கருதி எனக்கு டாடா உயில் எழுதி வைத்துள்ளார். இதை விட வேறு என்ன பெருமை எனக்கு வேண்டுமென கண்கள் குளமாகும் வகையில் பேசியிருக்கிறார்.