GST வரி பைத்தியக்காரத்தனம்!; சுப்பிரமணியன் சுவாமியின் அடுத்த சிக்ஸர்

21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பைத்தியக்காரத்தனம் சரக்கு மற்றும் சேவை வரி என்று சுப்ரமணியன்சுவாமி விமர்ச்சித்துள்ளார்.

ஐதராபாத்தில் பிரக்னாபாரதி சிந்தனையாளர் பேரவை என்ற அமைப்பின் சார்பில், ‘இந்தியா 2030-க்குள் ஒரு பொருளாதார வல்லரசு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற மாநிங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள சரக்கு, சேவை (GST) வரியை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக முதலீட்டாளர்களை வருமான வரியின் பெயராலும், 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பைத்தியக்காரத்தனமான சரக்கு, சேவை வரியின் பெயராலும் பயமுறுத்த வேண்டாம் என விமர்சித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி மிகவும் சிக்கலானது என்பதால் எந்த படிவத்தை நிரப்ப வேண்டும் என்று யாருக்கும் தெரியவில்லை.எனவும் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

What do you think?

மனநிம்மதியை தேடும் கோடீஸ்வர பிச்சைக்காரர்! – கோவையில் ஓர் விநோதம்

மோசடி புகார் – செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்