”நீ செத்து போன காக்கா போடி” கஸ்தூரியை விளாசிய சுசித்ரா.. வைரலாகும் பதிவு..!
சுசித்ரா:
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பாடகி சுசித்ரா.
சுசி லீக்ஸ்:
கடந்த 2016ஆம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் நடிகர் மற்றும் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
நான் காரணம் இல்லை:
யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்த சுசித்ரா, சுசி லீக்ஸ் விவகாரத்தில் என்னை தேவையில்லாமல் மாட்டிவிட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் நடிகர் தனுஷ் மற்றும் என் முன்னாள் கணவர் கார்த்திக் தான்.
இருவரும் பிராங் செய்ய ஏதாவது ட்விட்டர் அக்கவுண்ட் தேவைப்பட்டதால், கார்த்திக் என் அக்கவுண்டை தனுஷிடம் கொடுத்துவிட்டார். என பகிரங்கமான குற்றசாட்டை வைத்தார்.
மீண்டும் தொடங்கிய சுசி லீக்ஸ்:
இந்த புகைப்படங்கள் அப்போது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு இந்த விஷயததை பற்றி தற்போது மக்கள் மறந்துள்ள நிலையில் பாடகி சுசித்ரா தனது பேட்டியின் மூலம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
கமல்ஹாசனையும் விட்டு வைக்காத சுசி:
கமல்ஹாசன் முதல் தனுஷ் வரை பலரையும் விமர்சித்த சுசித்ரா கடைசியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினச் சேர்க்கையாளர் என்றும் கூறி ரசிகர்களை அதிரச்சியில் ஆழ்த்தியுள்ளர்.
இனி பேட்டி அளிக்க மாட்டேன்:
இனி யு-டியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன். எனது பேட்டிகளை தவறான கண்ணோட்டத்துடன் ஒளிபரப்புகிறார்கள் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சொந்த சேனலில் மட்டும் தான் பேசுவேன்:
நான் பல யு-டியூப் சேனல்களை பார்த்து வருகிறேன். அதில் தலைப்புகளில் என்னை பற்றி தவறாக கூறுகின்றார்கள். ஆனால் இது எல்லாம் எந்த ஆதாரத்தை வைத்து அவர்கள் பேசுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.
அதைப்பற்றி நான் யோசிக்க போவதுமில்லை. இனி எந்த ஒரு யு-டியூப் சேனலுக்கும் நான் பேட்டி கொடுக்கப் போவதில்லை என்றும் இனி எனது சொந்த சேனலில் மட்டுமே பேசபோகிறேன்.
அதிலும் சினிமா விமர்சனங்களையும், தத்துவம் நிறைந்த விஷயங்களை பற்றிய வீடியோக்களை மட்டுமே நான் வெளியிடுவேன் என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது கஸ்தூரியின் பதிவால் மீண்டும் களமிரங்கியுள்ளார்.
கஸ்தூரி பேட்டி :
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் போஸ்ட் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “மற்றவர்கள் மீது வீண் குற்றங்களை சுமத்தி வருகிறார்.
அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி மற்றும் மனநல உதவி தேவைப்படுகிறது. அவரை வழிகாட்ட சரியான ஒரு துணை இல்லாததால் தான் வீடியோ மூலம் வாய்க்கு வந்தது எல்லாம் பேசி வருகிறார்.
கார்த்திக் குமாருக்கும் சுசித்ராவுக்கும் திருமணம் நடைபெறும்போதே சுசித்ராவின் பெற்றோர் உயிருடன் இல்லை. அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்கள்.
அவர்களின் குடும்பம் அடிப்படையிலேயே எந்தப் பிரச்சினையையும் சமாளிக்க முடியாமல் உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு சென்றவர்கள்.
அதே போல சுசித்ராவுக்கும் வழிகாட்ட சரியான ஒரு நபர் இல்லை என்பது தான் பிரச்சினை” என கஸ்தூரி நீளமான போஸ்ட் மூலம் சுசித்ராவை பயங்கரமாகத் தாக்கி இருந்தார்.
இந்த பதிவு ஒரு மாதத்தை கடந்த நிலையில் தற்போது சுசித்ரா காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.
சுசித்ரா பதிலடி:
நிச்சயமாக இது உண்மை இல்லை. எங்க அம்மா அப்பாவைப் பற்றி தப்பா பேசிய அந்த அம்மாவுக்கு அசிங்க அசிங்கமா சாவு வரப்போகுது. கஸ்தூரியை என்னென்ன கெட்டவார்த்தைகளால் திட்டலாம் என யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.
காக்காவ விட மோசமானவ நீ. நீ செத்து போன காக்கா போடி.. அப்படினு தான் சொல்ல தோணுது. எங்க அம்மா அப்பா பத்தி சொன்னது உண்மையில்லை. அவங்க ஒரு ஆக்சிடெண்டில் இறந்து போனாங்க.
அவங்களை பத்தி இப்படி தப்பா பேசுறது சரியில்லை. கஸ்தூரி திரும்பவும் ஸ்கூலுக்கு போய் மாரல் சயின்ஸ் கிளாஸ் அட்டென்ட் பண்ணு” என சுசித்ரா கொந்தளித்துள்ளார். இது தற்போது சமூக வளைதலத்தில் வைரலாகி வருகிறது.
-பவானி கார்த்திக்