கமல்ஹாசனையும் விட்டு வைக்காத சுசித்ரா..!! இனி நான் வெளியிடப்போகும் வீடியோ எல்லாம்..!! மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சுசித்ரா..!!
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பாடகி சுசித்ரா.
கடந்த 2016ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் நடிகர் மற்றும் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்த சுசித்ரா, சுசி லீக்ஸ் விவகாரத்தில் என்னை தேவையில்லாமல் மாட்டிவிட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் நடிகர் தனுஷ் மற்றும் என் முன்னாள் கணவர் கார்த்திக் தான். இருவரும் பிராங் செய்ய ஏதாவது ட்விட்டர் அக்கவுண்ட் தேவைப்பட்டதால்,
கார்த்திக் என் அக்கவுண்டை தனுஷிடம் கொடுத்துவிட்டார். என பகிரங்கமான குற்றசாட்டை வைத்தார்.
மீண்டும் தொடங்கிய சுசி லீக்ஸ் :
இந்த புகைப்படங்கள் அப்போது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு இந்த விஷயததை பற்றி தற்போது மக்கள் மறந்துள்ள நிலையில் பாடகி சுசித்ரா தனது பேட்டியின் மூலம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
கமல்ஹாசனையும் விட்டு வைக்காத சுசி :
கமல்ஹாசன் முதல் தனுஷ் வரை பலரையும் விமர்சித்த சுசித்ரா கடைசியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினச் சேர்க்கையாளர் என்றும் கூறி ரசிகர்களை அதிரச்சியில் ஆழ்த்தியுள்ளர்.
இனி யு-டியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன். எனது பேட்டிகளை தவறான கண்ணோட்டத்துடன் ஒளிபரப்புகிறார்கள் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சொந்த சேனலில் மட்டும் தான் பேசுவேன் :
நான் பல யு-டியூப் சேனல்களை பார்த்து வருகிறேன். அதில் தலைப்புகளில் என்னை பற்றி தவறாக கூறுகின்றார்கள். ஆனால் இது எல்லாம் எந்த ஆதாரத்தை வைத்து அவர்கள் பேசுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. அதைப் பற்றி நான் யோசிக்க போவதுமில்லை. இனி எந்த ஒரு யு-டியூப் சேனலுக்கும் நான் பேட்டி கொடுக்கப் போவதில்லை என்றும் இனி எனது சொந்த சேனலில் மட்டுமே பேசபோகிறேன்.
அதிலும் சினிமா விமர்சனங்களையும், தத்துவம் நிறைந்த விஷயங்களை பற்றிய வீடியோக்களை மட்டுமே நான் வெளியிடுவேன் என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
– பவானி கார்த்திக்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..