24 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற சுந்தர நாயகி சமேத அக்னீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்..
இரண்டாம் ராஜராஜ சோழனால் 900 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட நல்லாடை பரணி நட்சத்திர ஆலயமான, சுந்தர நாயகி சமேத அக்னீஸ்வரர் கோயில், மண்டல அபிஷேக பூர்த்தி விழா சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நல்லாடை கிராமத்தில் பழமை வாய்ந்த சுந்தர நாயகி சமேத அக்னிஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனை பெறுவதற்காக குழந்தை வரம் வேண்டி மிருகண்ட மகரிஷி யாகம் செய்த ஆலயமாகவும், பார்வதியின் சாபத்தால் ஒளியை இழந்த அக்கினி பகவான், இறைவனின் வரத்தால் இத்தலத்தின் தெற்கே இருக்கும் தீர்த்தத்தில் நீராடி இழந்த ஒளியை பெற்றதாக வரலாறு கூறுகிறது.
900 ஆண்டுகளுக்கு முன்பு சோழவள நாட்டை ஆட்சி செய்த இரண்டாம் ராஜராஜ சோழன் கருங்கல் ஆலயமாக புதுப்பித்தார். இது குறித்த கல்வெட்டுகள் ஆலயத்தின் கருவறை சுவர்களில் காணப்படுகிறது. பரணி நட்சத்திரக் காரர்களின் பரிகார ஆலயமாக விளங்கும்.
இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே மாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மண்டல அபிஷேக பூர்த்தி விழா இன்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு நவகிரக சாந்தி ஹோமம், மகாமிர்த்யுஞ்சய ஹோமம் சுதர்சன ஹோமம், உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு மகா அபிஷேகம் செய்யப்பட்டது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..