வாரத்தின் நாட்களும் அதிஷ்டம் தரும் நிறங்களும்…!
வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை என்பது பொதுவாக சிவபெருமானுக்கு உரிய நாளாக சொல்லப்படுகிறது. இந்த கிழமைகளில் நல்ல காரியம் தொடங்கும் போதும், வெளியில் செல்லும்போதும் நாம் வெள்ளை, கிரீம், இளஞ்சிவப்பு, வெளிர் நீளம் மற்றும் வெளிர் மஞ்சள் ஆகிய நிறங்கள் கொண்ட ஆடைகளையே அணிய வேண்டும்.
செவ்வாய் கிழமை என்பது தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக சொல்லப்படுகிறது. இந்நாளில் நாம் மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, குங்குமம் ஆகிய நிறங்களால் ஆன ஆடைகளை அணிந்தால் நன்மை தரும்.
புதன் கிழமையானது பொதுவாக விநாயகருக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. எனவே புதன் கிழமையில் வெளியில் செல்வோர் பச்சை நிறத்தில் ஆடைகளை அணிந்திருந்தால் தொட்டதும் ஜெயமாகும்.
வியாழன் என்பது தட்சணாமூர்த்தி, விஷ்ணு பகவானுக்கும் உகந்த நாளாகும். எனவே வியாழன் கிழமைகளில் வெளியில் செல்வோர் குருவிற்கு உகந்த நிறமான மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது நல்ல சிறப்பாகும்.
இந்துக்களுக்கு வாரத்தில் மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுவது வெள்ளிக்கிழமை. பொதுவாக வெள்ளி கிழமை என்பது அம்மனுக்கு உகந்த தினமாகும். எனவே சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் ஆடைகள் அணியலாம்.
சனிக்கிழமை என்றாலே அனைவருக்கும் அறிந்த சனிபகவானுக்கு உரியது. இந்நாளில் கருப்பு, நீல நிற ஆடைகளை அணியலாம்.
ஞாயிறு என்பது சூரியபகவானுக்கு உகந்தது. எனவே இந்நாளில் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறத்தில் ஆடைகளை அணிந்தால் அது நன்மை அளிக்கும்.