நகங்கள் அழகாகவும் நீளமாகவும் வேண்டுமா..? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்..!
உங்களின் நகங்கள் அழகாகவும் நீளமாக நீண்டு வளர வேண்டுமா? அது அவ்வளவு எளிமையான விஷயம் இல்லை ஆனால் சிலவகை குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் உங்களின் நகங்களை நீங்கள் விரும்பும் வண்ணம் பராமரிக்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
- நகங்கள் உடையாமல் இருக்க லேசாக சூடாக உள்ள ஆலிவ் எண்ணெயில் கைகளை சிறிது நேரம் வைத்திருந்து பின் துடைத்து எடுக்கலாம்.
- நகங்களில் கிருமிகள் வராமல் தடுக்க இளஞ்சூடான நீரில் புதினா மற்றும் துளசி சேர்த்து விரல்களை சிறிது நேரம் அதில் வைத்திருக்கலாம்.
- நகங்களை பராமரிக்க சூரியகாந்தி எண்ணெயை கை மற்றும் கால்களில் தடவி விடலாம்.
- நக சுத்தி மற்றும் அழுகி போன நகங்களை அழகாக்க வெண்ணை மற்றும் குங்குமப்பூ கலந்த கலவையை தடவி வர நகங்கள் அழகாகிவிடும்.
- அடிக்கடி உடைந்துபோகும் நகங்களுக்கு குழந்தை எண்ணெயில் சிறிது நேரம் நகங்களை வைத்திருக்கலாம்.
- நகங்களை வெட்டுவதற்கு முன்பு எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினால் அழகாகவும் விரும்பும் வடிவிலும் வெட்டலாம்.
- நகங்கள் நீளமாக வளர வைட்டமின் சி மிகவும் முக்கியம். வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சையை இரண்டாக நறுக்கி கை மற்றும் கால்களின் நகங்களில் தடவி மசாஜ் செய்து சூடான நீரில் கழுவலாம். இதனை தினமும் தொடர்ந்து செய்து வர விரும்பிய நகங்களை பெறலாம்.
