நடிகர் ரஜினிகாந்த தன்னுடைய திரைப்படங்கள் முடிந்ததும் இமயமலை செல்வது வழக்கமாக வைத்திருக்கிறார். இருப்பினும் உடல்நலக் குறைவு காரணமாக 2018 ல் இருந்து இமயமலை செல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் மீண்டும் இமயமலை செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளர்.
இதுக்குறித்து அவருருடைய போயஸ் இல்லத்தில் இருந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா காரணமாக இமயமலை செல்ல முடியாமல் இருந்தது. தற்போது 4 ஆண்டுகளுக்கு பின் இமயமலைக்கு செல்கிறேன்’ என்றார். ஜெயிலர் படம் குறித்த கேள்விக்கு, நீங்கள் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்’ என்றார்.