‘கொரோனா வைரஸ் எதிரொலி’ உச்சநீதிமன்றத்தின் அதிரடி முடிவு!

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உச்சநீதிமன்றத்தில் முக்கியமான வழக்குகள் விசர்க்கப்படும் அமர்வுகள் மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 127 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா எதிரொலியாக சுகாதாரதுறையின் அறிவுறுத்தலின் படி, உச்சநீதிமன்றத்தில் முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு மட்டுமே நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

கடத்தப்பட்ட மணமகள் இளமதி சேலம் மேட்டூர் காவல்நிலையத்தில் ஆஜர்!

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரருக்கும் கொரோனாவா?