ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு உயா்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததை அடுத்து அவர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இதனால், அமைச்சர் பதவியையும் இழந்தார். இந்த நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் 11ஆம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து, பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்கி தமிழக சட்டப்பேரவை செயலகம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கோரி முதலமைச்சர் ஆளுநருக்கு அனுப்பினார்.
பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்த நிலையில், ஆளுநரின் முடிவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 75 ஆண்டுகளில் இதுபோன்ற நடந்தது இல்லை தமிழக அரசு வாதம் முன்வைத்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆளுநர் செயல்படுவது நீதிமன்ற அவமதிப்பு என தெரிவித்த தமிழக அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, எம்எல்ஏவாக தொடரும் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் வாதிட்டது.
அப்போது, அமைச்சர் பொறுப்பு வழங்க மறுப்பதை அடிப்படை உரிமை மறுக்கப்படுவதாகக் கூற முடியாது என்று ஆளுநர் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு பொன்முடி பதவியை ராஜினாமா செய்தாரா என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுக்க ஒரு நாள் அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைத்துவிட்ட பின்னர் ஆளுநர் ரவி எதன் அடிப்படையில் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என மறுக்கிறார் என கேள்வி எழுப்பினர்.
பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ரவி முடிவு எடுத்து தெரிவிக்காவிட்டால் உச்சநீதிமன்றம் உரிய அரசியல் சாசன அடிப்படையிலான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும் எனவும் உத்தரவிட்டனர்.
ஆளுநரின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்தை மீறியதாக இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், ஆளுநர் உச்சநீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம் என எச்சரித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..