மத்தியபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய பிரதேச அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா விலகி பா.ஜ.கவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்கள் 22 பேரும் தங்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தனர். 6 பேரின் ராஜினாமாவை மட்டும் ஏற்றுக்கொண்ட சபாநாயகர், 16 பேரின் கடிதத்தின் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு பெரும்பான்மைய இழந்துவிட்டதால், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என முன்னாள் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை அவசர வழக்காக இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக நாளைக்குள் மத்திய பிரதேச அரசு பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

What do you think?

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 3-ஆக அதிகரிப்பு

டி-20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இரட்டை சதம் அடிப்பார் – பிராட் ஹாக்