புலன் விசாரணை தரத்தை உயர்த்த அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
அமலாக்கத்துறை தனது விசாரணையின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சுனில்குமார் அகர்வால் என்பவருக்கு எதிரான சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த், திபான்கர் தத்தா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்ததை தொடர்ந்து 5000 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினர்..
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டிருக்குறது எனவும் இது மிகவும் மோசமான புலன் விசாரணையின் தொடர்ச்சி என்றே காண முடிவதாக அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அமலாக்கத்துறை தனது விசாரணையின் தரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
மேலும் நீதிபதிகள், குறிப்பாக சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்குகளில் யாரோ ஒரு நபர் அளித்த வாக்குமூலத்தை கொண்டு திருப்தியடைந்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்வதாகவும் ஆனால் நீதிமன்றத்தில் அந்த வழக்குக்கான உரிய ஆதாரம், முகாந்திரம் உள்ளிட்டவற்றை நிரூபிக்க தவறுவதாகவும் தெரிவித்தனர்..
எனவே புலன் விசாரணயின் தரத்தை அமலாக்கத்துறை அமைப்பானது மேம்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..