பதஞ்சலி ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை..!!
பிரபல ஆயுர்வேதிக் நிறுவனங்களில் ஒன்றான பதஞ்சலி நிறுவனத்தின் மீதான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அதற்கு முன் நிறுவனத்தின் மீது ஏன் இந்த வழக்கு என பார்க்கலாம்.
அலோபதி மருந்துகளுக்கு எதிராகவும் தவறான கருத்துகளுடனும் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியதால் பதஞ்சலி நிறுவனம் மீது இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை மறுத்து பதஞ்சலி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி அமனுல்லா, “தவறான விளம்பரங்களை சகித்துக் கொள்ள முடியாது’’ என கூறினார்.
குணப்படுத்தவே முடியாத நோய்கள், மரபணு நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களையும், பதஞ்சலி தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. குறிப்பாக உண்மைக்கு மாறாக பல்வேறு விளம்பரங்களை செய்து பொய்களை பரப்புவதாக ஐஎம்ஏ குற்றஞ்சாட்டியது.
யோகா குரு ராம்தேவ் நிறுவனத்துக்குச் சொந்தமான பதஞ்சலி ஆயுர்வேதா மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் தங்கள் தயாரிப்புகளின் தவறான விளம்பரங்களுக்கு எதிரான உத்தரவை மீறி செயல்பட்டதால் உச்ச நீதிமன்றம் மார்ச் 22ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
யோகா குரு ராம்தேவ் இணை நிறுவனராக இருக்கும் பதஞ்சலி ஆயுர்வேத வழக்கினை கடைசியாக கடந்த நவம்பர் மாதம் விசாரணை செய்த நீதிமன்றம், “யோகா குரு பாபா ராம்தேவ் யோகா கலையை பிரபலப்படுத்தியதால் அவர் மீது மரியாதை அதிகமானது. ஆனால், அவர் மற்ற மருத்துவ முறைகளை விமர்சனம் செய்து பதாஞ்சலியை முதன்மை படுத்துவது தவறு பதஞ்சலி நிறுவன விளம்பரங்கள் மருத்துவர்களை கொலைகாரர்கள் போல் சித்தரிக்கின்றன” என வாதங்களை தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்வைத்தது.
அதன் பின் பதஞ்சலி யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா நீதிபதி முன் மன்னிப்பு கேட்டனர் ஆனால் அதனை நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதனை தொடர்ந்து இன்று ராம்தேவ் மற்றும் அவரது கூட்டாளி பாலகிருஷ்ணா இருவரும் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவை மீறி செயல்பட்டதாலும், நடவடிக்கை களுக்கு எதிராக செயல்பட்டதாலும், கடந்த மாதம் பதஞ்சலி நிறுவனம் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டிருந்தனர். ஆனால் அவர்களின் மன்னிப்பை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இவ்விவகாரத்தில் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக ராம்தேவின் வழக்கறிஞர் கூறினார்.
மேலும் நீதிமன்றம் என்ன தண்டனை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம், என தெரிவித்திருந்தார்.
கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் பதஞ்சலியின் மருந்துகள் தொடர்பான அனைத்து தவறான விளம்பரங்களையும் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களில் இருந்து உடனடியாக நீக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசையும் உச்ச நீதிமன்றம் கண்டித்தது மட்டுமின்றி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..