மாரடைப்பு ஏற்பட்டால் 3 மணி நேரத்தில் உயிர் பிழைப்பு..! மா.சுப்பிரமணியம்..!
கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அதி நவீன சிகிச்சை பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் , 7 அல்லது 8 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையின் டாக்டர் பக்தவச்சலத்தை விமான நிலையத்தில் சந்தித்தேன். அவருடைய பாக்கெட்டில் லோடிங் டோஸ் என்று சொல்லக் கூடிய 3 வகையான மாத்திரைகளை வைத்திருந்தார்.
அதை பற்றி நான் அவரிடம் கேட்டேன், அதற்கு அவர் கூறியதாவது அது எல்லோரும் வைத்திருக்க வேண்டிய ஒன்று. யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக அந்த 3 வகையான மாத்திரைகளை போட்டுக் கொண்டால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உயிரை காப்பாற்ற வேண்டும்.
அதன் பிறகு அவருக்கு அளிக்கப்பட வேண்டிய இதய சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர் பக்தவச்சலம் தெரிவித்திருந்தார்.
அவர் சொன்னது என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் ஒரு திட்டத்தை தமிழக அரசின் சார்பில் தொடங்கி வைத்தோம். அந்த திட்டத்திற்கு பெயர் இதயம் காப்போம். உண்மையில் அந்த திட்டத்திற்கு பக்தவத்சலம் மருத்துவ திட்டம் என பெயர் வைத்திருக்கலாம்.
தமிழகத்தில் இருக்கும் 8713 துணை சுகாதார நிலையங்கள், 2286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 10,991 மருத்துவமனைகளிலும் இந்த லோடிங் டோசஸை வாங்க முடிவு செய்துள்ளோம்.
மலை பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளுக்கும் இந்த மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளது. அங்கு சுற்றியுள்ள மக்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டால் இந்த லோடிங் டோஸ்களை செலுத்திய பின் உடனே உயிரை காப்பாற்ற பக்கத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லவேண்டும்.
இந்த திட்டத்தை தொடங்கிய போது டாக்டர் பக்தவத்சலம் அமெரிக்காவில் இருந்தார். அவர் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் அவரது கையால் தொடங்கி இருப்போம். தமிழகம் முழுவதும் உள்ள துணை சுகாதார நிலையங்களில் எவ்வளவு பேர் லோடிங் டோஸ்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களில் 7412 பேர் துணை சுகாதார நிலையங்களில் 484 பேரும் லோடிங் டோஸ்களை பயன்படுத்தியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக லோடிங் டோஸ்களை 7896 பேர் பயன்படுத்தியுள்ளார்கள். என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
டாக்டர் பக்தவத்சலம் சொல்லும் லோடிங் டோஸ்கள் Atorvastatin 80 mg, Clopitab 150 mg, Disprin 350 mg ஆகிய மாத்திரைகளை உங்கள் பாக்கெட்டில் எப்போதும் வைத்திருங்கள். இந்த மாத்திரையின் விலை ரூ 100 தான். மாரடைப்பு வந்த 5, 10 நிமிடங்களில் இந்த மருந்தை கொடுத்துவிட வேண்டும் என்றும் டாக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..