ஹரி, சூர்யா, இமான் இது ‘அருவா’ கூட்டணி

ஹரி-சூர்யா 6-வது முறையாக இணையும் புதிய படத்திற்கு ‘அருவா’ என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வெற்றிக் கூட்டணியாக வலம் வருபவர்களில் முக்கியமானவர்கள் சூர்யா-ஹரி. ‘ஆறு’ படத்தின் மூலம் இணைந்த இக்கூட்டணி, தற்போது தங்களது 6-வது படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும், சூர்யாவின் 39-வது படமான இதற்கு ‘அருவா’ என பெயரிடப்பட்டுள்ளது.

சூர்யாவின் படங்களுக்கு இதுவரை இசையமைக்காத டி.இமான், முதன்முறையாக ‘அருவா’ படத்தின் மூலம் சூர்யாவுடன் இணையவுள்ளார். ஹரி-சூர்யா கூட்டணியில் ஆறு, வேல். சிங்கம்-1, சிங்கம்-2, சிங்கம்-3 என இதுவரை வெளிவந்த அனைத்து படங்களும் வெற்றியடைந்துள்ளன. இந்நிலையில். ‘அருவா’ படம் குறித்த அறிவிப்பு கோலிவுட்டில் அப்படம் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த வருடம் தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட வேண்டும் என திட்டமிட்டுள்ளதால், ஏப்ரல் மாதம் துவங்கும் ‘அருவா’ படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் குறித்தும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

What do you think?

2-வது டெஸ்ட்: நியூசிலாந்து வெற்றி; தொடரும் இந்தியாவின் ஒயிட்வாஷ்!

CORONA- பலி எண்ணிக்கை 3,000; பாதிப்பு 1 லட்சம்