தலைப்பு சிக்கலில் சூர்யாவின் புதிய படம்

ஹரி-சூர்யா இணைந்துள்ள திரைப்படத்திற்கு ‘அருவா’ என தலைப்பு வைத்துள்ளது சர்ச்சையாகியுள்ளது. இதனால் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

‘சூரரைப் போற்று’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை ஹரி இயக்கவுள்ளார். டி.இமான் இசையமைக்க உள்ள இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் தலைப்பு ‘அருவா’ என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், சூர்யாவின் படத்திற்கு ‘அருவா’ என பெயரிடப்பட்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தருண்கோபி தயாரிப்பில் பாடலாசிரியர் ஏகாதசி இயக்கியுள்ள படத்திற்கு ‘அருவா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டுள்ளது. இதனால் இந்த தலைப்பை விட்டுக் கொடுக்க மாட்டோம் என ஏகாதசி தெரிவித்துள்ளார்.

What do you think?

ஸ்மார்ட் சிட்டிக்கே இந்த நிலையா? – செல்லூர் ராஜூ நிகழ்ச்சியில் இடிந்து விழுந்த ரவுண்டானா!

‘கொரோனா வைரஸ் எதிரொலி’ சென்னையிலிருந்து புறப்படும் 10 விமானங்கள் ரத்து!