நடிகர் சூர்யா, இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவாகும் அருவா படத்தின் கதை இதுவா?

இயக்குனர் ஹரி,நடிகர் சூர்யா கூட்டணி 6வது முறையாக இணையும் அருவா படத்தின் கதை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக சூரரை போற்று திரைப்படம் வெளியாகவுள்ளது. இதையடுத்து தனது 39வது படமாக அருவா படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் சூர்யா. இந்த படத்தை அதிரடி இயக்குனர் ஹரி இயக்குகிறார்.

சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் உருவாகும் 6வது படம் இதுவாகும். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான ஆறு,வேல்,சிங்கம்,சிங்கம் 2 மற்றும் சிங்கம் 3 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைபெற்றுள்ளன. இந்த நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்துள்ளது ரசிகர்கள் பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அருவா என்று பெயர் வைத்துள்ளனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் மூலம் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரியுடன் முதன்முறையாக இணைந்து பணியாற்றவுள்ளார் இமான்.

இந்நிலையில் இந்த அருவா படத்தின் கதை என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் அண்ணன்,தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்டதாகவும் இவர்களது கூட்டணியில் ஏற்கனவே வெளியான வேல் படத்தை போல இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீப காலமாக குடும்ப பாசத்தை மையமாக கொண்ட திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இந்த படமும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What do you think?

‘பாஜகவில் இணைவாரா ரஜினிகாந்த்?’ நடிகர் ராதாரவி வெளிப்படையான பதில்!

‘மீண்டும் சேப்பாக்கத்தில் தோனி’ கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!