‘FEFSI தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சூர்யாவின் குடும்பம்’ அதுவும் இத்தனை கோடியா?

கொரோனாவால் வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் FEFSI தொழிலாளர்களுக்கு சூர்யாவின் குடும்பம் உதவியுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த கொரோனா வைரஸ் பரவலால் தற்போது திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் FEFSI அமைப்பின் தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெற்றால் தான் இவர்களுக்கு வருமானம் கிடைக்கும். தற்போது படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இவர்களின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் குடும்பம் இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. நடிகர் சூர்யாவின் அப்பா சிவகுமார் மற்றும் சகோதரர் நடிகர் கார்த்தி ஆகியோர் இணைந்து FEFSI தொழிலாளர்களுக்கு 10 கோடி ரூபாயை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

What do you think?

வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை! – விஜயபாஸ்கர் எச்சரிக்கை

144 தடை உத்தரவில் உள்ள கட்டுபாடுகள்!