சூர்யாவின் ‘அருவா’ ‘வேல்’ படத்தின் இரண்டாம் பாகமா?

ஹரி இயக்கவுள்ள ‘அருவா’ படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும், இது ‘வேல்’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இயக்குநர் ஹரியுடன் சூர்யா இணையும் ‘அருவா’ படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. 6-வது முறையாக இவர்கள் இருவரும் இணையும் இப்படத்தின் இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

‘அருவா’ படத்தின் கதை முழுவதும் கிராமத்து பின்னணியில் உருவாகவுள்ளதாகவும், இதில் சூர்யா இரட்டை வேடத்தில் அண்ணன் தம்பியாக நடிக்கவிருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஹரி இயக்கிய கிராமத்து கதையம்சம் கொண்ட ‘வேல்’ திரைப்படத்திலும் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதனால், ‘அருவா’ படம் ‘வேல்’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

What do you think?

கொரோனாவால் 54,000 சிறை கைதிகளுக்கு விடுதலை!

‘ஹோலி கொண்டாட்டம் வேண்டாம்’ பிரதமர் வழியில் அமித்ஷா!