‘தல’யின் பிறந்தநாளில் சூர்யாவின் சூரரை போற்று!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக்கி இருக்கும் சோற்றை போற்று திரைப்படம் தல அஜித்தின் பிறந்தநாளில் வெளியாகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சூரரை போற்று.இந்த படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த திரைப்படம் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் என்று முதலில் சொல்லப்பட்டது.ஆனால் தற்போது அந்த போட்டியிலிருந்து விலகியுள்ளது சூரரை போற்று.

இந்நிலையில் இந்த திரைப்படம் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனையறிந்த சூர்யா மற்றும் அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அதற்கான காரணம் என்னவெனில் மே 1ம் தேதி தான் தல அஜித்தின் பிறந்தநாள் அன்றைய தினம் சூர்யாவின் திரைப்படம் வெளியாகவுள்ளதால் இருவரின் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

What do you think?

‘தேனாம்பேட்டையில் பரபரப்பு’ காவல்நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல்!

டெல்லி கலவரத்தில் போலீசாரை துப்பாக்கி காட்டி மிரட்டிய நபர் கைது!