சுஷாந்த் சிங் ராஜ்பூட் கடந்த 2019ம் ஆண்டு தற்கொலை செய்து உயிரிழந்தார், இந்த செய்தி வெளியானவுடன் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை கிளம்பியது. இதனால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் சுஷாந்தின் உடலை பிரதே பரிசோதனை செய்த ஊழியர் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளது வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் வெகுவாக வளர்ந்து வந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து நாடு முழுவது பிரபலாமானார். தொடர்ந்து அவரது படங்கள் வெற்றியடைந்து வந்த நிலையில் திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியானது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர்கள் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் முரையிட்டு வந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த ஊளியர்களில் ஒருவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அந்த நாளில் மருத்துவமனைக்கு 5 உடல்கள் வந்தது, அதில் ஒரு விஐபி உடல் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த உடலை பார்த்ததும் தான் தெரிந்தது அது சுஷாந்த் சிங்கின் உடல் மற்றும் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் தெரிந்தது. அவரது உடலின் கழுத்து பகுதிகளில் காயங்கள் இருந்ததை பார்த்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தோம் என்றும் அவர் அதை கண்டுகொள்ளாமல் உடலை புகைப்படம் எடுத்து பிரேத பரிசோதனை செய்ய மட்டும் சொன்னார் என்றும் கூறினார். இந்த ஊழியரின் பத்திரிகையாளர் சந்திப்பு சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.