மனநிம்மதியை தேடும் கோடீஸ்வர பிச்சைக்காரர்! – கோவையில் ஓர் விநோதம்

மன நிம்மதிக்காக வெளிநாட்டு தொழிலதிபர் கோவையில் பிச்சை எடுப்பதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் கிம். பிரபல தொழிலதிபரான இவர், சில மாதங்களுக்கு முன்பு ஆன்மீக பயணமாக, கோவை வந்துள்ளார். அப்போது அங்குள்ள ஈஷா யோகா மையத்தில் சேர்ந்து தியானம், ஏழை மக்களுக்கு சேவை உள்ளிட்ட சமூக பணிகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இதில் அவருக்கு மன்நிம்மதி கிடைக்கவில்லையாம்.

இதனால், ரயில் நிலையத்திற்கு சென்ற கிம், அங்கு வரும் பொதுமக்களுக்கு வணக்கம் வைத்து அவர்கள் கொடுக்கும் பணத்தில் உணவு வாங்கி சாப்பிடுகிறார். இதன் மூலம் மனநிம்மதி கிடைப்பதாக தெரிவித்துள்ள கிம், அவர்களிடம் யாசகம் கேட்டு தன்னுடைய வேதனைகளை பூர்த்தி செய்து கொள்வதாக கூறியுள்ளார். வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மனநிம்மதிக்காக பிச்சை எடுப்பதை கோவை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

What do you think?

ஆம்புலன்ஸை டிராக் செய்ய புதிய செயலி; ஆனாலும் ஸ்பீடு அதேதான்!

GST வரி பைத்தியக்காரத்தனம்!; சுப்பிரமணியன் சுவாமியின் அடுத்த சிக்ஸர்