மன அழுத்தத்தின் அறிகுறிகளும் கையாளும் வழிமுறைகளும்..!!
மன அழுத்தம் ஏற்பட காரணம் என்றுபார்த்தால் நம்மை சுற்றி நிலவும் சூழ்நிலை மாற்றங்கள். கவலை, கூட்டம், சத்தம், குடும்பம், தொழில் நெருக்கடிகள், அதிகமான வேலை சுமை, பதட்டமும், அவசரமும் நிறைந்த வாழ்க்கைமுறை ஒருவர் உடல் அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் தருணம் இதுபோன்ற சுழலில் மன அழுத்தம் ஏற்படுகிறது .
மன அழுத்தத்தின் அறிகுறிகள் என்று பார்த்தால், அது நபருக்கு நபர் மாறுபடும். அந்த வகையில் பதட்டம், எரிச்சல், அதிக களைப்படைவது, தூக்கமின்மை, மூச்சுவிடுவதில் சிரமம், அஜீரணக் கோளாறு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, உள்ளங்கை வேர்ப்பது, இருதயம் வேகமாகத் துடிப்பது, உடல் தசைகள் இறுகுவது போன்றவை மன அழுத்தத்தின் அறிகுறிகளாகும்.
மன அழுத்தத்தை எதிர் கொள்ளும் வழிமுறைகள் :
வாழ்க்கையில் பிரச்சனைகளே வரக்கூடாது என்று எண்ணுவதைவிட அதை எப்படி சரிசெய்வது என்று திட்டமிடுங்கள் . ஒரு பிரச்சனை வந்தால் அது உங்களைமட்டும் பாதிக்காது, உங்களை சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள் .
வேலை தொடர்பான பிரச்சனைகளை அலுவலகத்திலிருந்து வெளியே வரும்போது, அங்கேயே விட்டுவிட்டு வரவேண்டும். தினசரி எட்டு மணி நேர உறக்கம் என்பதை கட்டாயப்படுத்திக் கொள்வது அவசியம். அப்போதுதான், அடுத்த நாளை உற்சாகமாக எதிர்கொள்ளவும் வேலைகளில் கவனம் செலுத்தவும் முடியும்.
உணவுப்பழக்கம் முக்கியமான ஒன்று. ஒரேசமயத்தில் வயிறுமுட்ட சாப்பிடாமல், கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கைக்கு தேவையான செயல்களில் நேரத்தை செலவிடுங்கள் ,பொழுதுபோக்கு விஷயங்களுக்கு வீணாக நேரத்தை செலவிடாமல் இருப்பது நன்மை தரும் .
வாழ்க்கைக்கு அவசியமானது என்பதை பற்றிமட்டும் சிந்திக்க வேண்டும். நம்முடைய உணர்வுகள் பிறரைக் காயப்படுத்தாமல் பார்த்துக்கொள்வது மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.
தோல்விகள் என்பது நிரந்தரம் இல்லை. ஆனால், அந்தத் தோல்விகளிலிருந்து, எப்படி வெளியே வர வேண்டும் என்ற பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தற்காலிக மன அழுத்தம் என்பது அதுவாகவே சரியாகிவிடும்.
ஆனால், சில பிரச்னைகளால் சாப்பிட முடியாமல், தூங்கமுடியாமல் போனாலோ, வேலைகளில் பாதிப்பு ஏற்பட்டாலோ அது தீவிர மன அழுத்தமாக மாறிவடும் இதுமாதிரியான சூழலில் மனநல மருத்துவரைச் சந்தித்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வதே சரியானது.
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..